இந்த வாரம், செய்திகளில் அதிகம் காணப்படாத, ஆனால் நெகிழவைக்கும் ஒரு சம்பவம் குறித்துப் படித்தேன். சிட்னியின் டராங்கா மிருகக்காட்சிச் சாலையில் (Taronga Zoo) நடந்த ஒரு யானையின் பிரசவம் குறித்த செய்திதான் அது. இதிலென்ன அதிசயம் இருக்கு, யானைக் குட்டி பிறப்பதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்கத் தோன்றும். முழுவதும் படித்துவிட்டுக் கேளுங்கள் கேள்வியை.
தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட ”பார்ன் டிப்” என்ற யானைக்கு, 22 மாத கர்ப்பகாலத்திற்குப்பின், பிப்ரவரி 28ந் தேதி பிரசவ வலி தொடங்கியது. சாதாரணமாக யானைகளுக்குச் சில மணிநேரங்களில் பிரசவம் ஆகிவிடும். ஆனால் இந்த யானைக்கு, சில நாட்கள் ஆகியும் பிரசவமாகவில்லை என்றதும், சிறந்த கால்நடை மருத்துவர்களை அழைத்துப் பரிசோதித்ததில், வயிற்றினுள் குட்டி தலைகீழ் நிலையில் இருப்பதால் பிரசவம் சிக்கலாகும் என்றும், தாய்-சேய் ஒருவரோ, இருவரோ உயிரிழக்க நேரிடும் என்றும் தெரிய வந்தது. மேலும் அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்துபார்த்ததில், குட்டி உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாததால், குட்டி இறந்துவிட்டது என்றே முடிவு செய்தனர்.
சிஸேரியன் செய்யவேண்டியதுதானே தோணுது இல்லியா? யானைகளுக்கு சிஸேரியன் செய்றதெல்லாம் ரொம்ப ரொம்ப சிக்கலான விஷயமாம். அதனால செய்ய மாட்டாங்களாம்; எவ்வளவு கஷ்டம்னாலும் தானாத்தான் பிறக்கணுமாம். ஆனா, இப்ப குட்டி இறந்து போனதுனால, குட்டியின் முயற்சி இருக்காது; அந்த யானை தானாதான் பெற்றெடுக்கணுமாம். அதுக்கு இன்னும் ஒரு வருடம் வரை ஆகலாமாம். ஆமா, அதுவரை, இறந்த குட்டியை அந்த யானை வயிற்றிலேயேதான் சுமந்துகிட்டு இருக்கணும்!!
இதனாலே, இந்த விஷயம் எல்லாருக்கும் சோகத்தைத் தந்தது. மிருகக்காட்சி சாலைக்கு மக்கள் பலரும் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்து வந்த நிலையில், தாய் யானை விநோதமாக நடந்துகொண்டதை, மிருகக்காட்சிச் சாலையினர் கண்டனர். அதாவது, சில முறை, உருளவும், பிரளவும் செய்தது. சில முறை அந்த யானை தன் தலையில் நிற்க முயற்சித்தது. தன் வயிற்றில் தலைகீழாக இருக்கும் குட்டியை கவிழ்த்து, நேராக்க முயற்சிப்பது போல அதன் செய்கைகள் இருந்ததாகப் பின்னர் குறிப்பிட்டனர்.
இப்படியாக, மார்ச் 8ந் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்ட குட்டி, 10ந் தேதி பிறந்தது. இறந்து பிறந்த குட்டியைப் பரிதாபமாக எல்லாரும் பார்த்திருக்க, மெல்ல அசைந்து, தலையைத் தூக்கிப் பார்த்தது அந்தக் குட்டி!! ஆமாம், அந்தக் குட்டி இறக்கவில்லை, உயிருடன் இருக்கிறது!! எப்படி இந்த அதிசயம் நடந்தது? வயிற்றினுள் இருந்தபோது, குட்டி கோமா நிலைக்குச் சென்றிருக்கக்கூடும், அதனால்தான் இதயத் துடிப்பு முதல் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் மருத்துவர்கள் சொல்லுகின்றனர்.
தாய் யானைக்குப் பிரசவ வலி தொடங்கி ஒன்பது நாட்களுக்குப் பின்னர் உயிருடன் பிறந்த குட்டி அதிசயப் பிறவியாகவேப் பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு Mr. Shuffles என்று செல்லமாகப் பெயரிட்டு அழைக்கின்றனர். புதுப் பேர் வைக்கிறதுக்கு ஒரு போட்டியும் அறிவிச்சிருக்காங்க!! சில நாட்கள் கோமாவுல இருந்ததால, பாதிப்பு எதுவும் இருக்கான்னு பார்க்கிறதுக்காகத் தீவிரமா கண்காணிக்கிறாங்க மிஸ்டர். ஷஃபிள்ஸை!! ஆனாலும், தானே நடக்கவும், பால் குடிக்கவும், ஓடியாடவும் ஆரம்பிச்சுட்டதால அப்படி எதுவும் இருக்காதுன்னே தோணுது. அப்படியே இருக்கட்டும்.
இப்ப என்ன சொல்றீங்க?

CHAPTER 36, VERSION 81, 82 AND 83
Sunday, April 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment